திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் கணவன் மனைவியை கொலை செய்த கொடூர சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது .
கேரளாவின் கோழிக்கூடு பகுதியை சேர்ந்த ஜாஹிர் என்பவருக்கும், முசிலா (20) என்ற பெண்ணிற்கும் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன் ஜாஹிர் வெளிநாட்டில் வேலை புரிந்து வந்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த 8 மாதத்திற்கு முன்பு தன் சொந்த ஊருக்கு திரும்பினார். இதற்குப்பின் ஜாஹிர் தன் சொந்த ஊரிலே பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். ஜாஹிர் தன் மனைவியின் மீது திருமணமான முதலிலிருந்தே சந்தேகப்பட்டு வந்திருக்கிறார். இதனால் மனதளவில் அதிகமாக பாதிக்கப்பட்டு இரவில் தூங்க முடியாமலும் இருந்துள்ளார்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இரவு தூங்க முடியாமல் முழித்துக் கொண்டே இருந்த ஜாகிர் தூங்கிக் கொண்டிருந்த தன் மனைவியை திடீரென்று கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். இதனையடுத்து முசிலாவின் அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் வந்து பார்த்த போது முசிலா ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிறகு அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து ஜாகீர் போலீசில் தன குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் கொலையாளியான ஜாகிரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.