தொடர் மழை காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 20 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஒரு வாரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
நிவர் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே 20 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் எதிரில், ஏற்கனவே மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சப்வே அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கனமழை காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரு வாரத்தில் இந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என கூறப்படுகிறது.