அகண்ட பாரதம் விரைவில் சாத்தியமாகும் என்று ஹரித்துவாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஹரித்துவாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்ததாவது: “கடவுள் கிருஷ்ணர் விருப்பப்படி இந்தியா எழுச்சி பெறும் என தத்துவஞானி அரவிந்தர் கூறியுள்ளார். இந்தியா குறித்து அரவிந்தர் மற்றும் சுவாமி விவேகானந்தா கூறியதில் நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். நமது இலக்கை நோக்கி நகரும் வேகத்தை அடைவதற்கு 20 முதல் 25 ஆண்டுகள் ஆகலாம்.
ஆனால் நாம் ஒன்றிணைந்து பணியாற்றினால் தற்போதுள்ள வேகத்தை கூட்டி இலக்கை அடைவதற்கான நேரம் பாதியாக குறையும். உலகம் முழுவதும் உள்ள அனைத்து வகையான மக்களையும் இந்தியா வரவேற்றுள்ளது. இந்தியா தனது இலக்கை அடைவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது, நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க முயற்சி செய்பவர்கள் விலகிச் செல்லலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.