சர்வானந்த் நடிப்பில் உருவாக உள்ள கணம் படத்தில் நடிகை அமலா இணைந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் 80-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் மைதிலி என்னை காதலி படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் ரஜினி, கமல் போன்ற டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இதன்பின் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலான அமலா திரைப்படங்களில் நடிக்கவில்லை.
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின் அமலா ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி சர்வானந்த், ரித்து வர்மா இணைந்து நடிக்கும் கணம் படத்தில் நடிகை அமலா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக உள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது .