Categories
தேசிய செய்திகள்

20 ஆயிரம் கோடி முதலீடு…. குஜராத்தில் ரயில் என்ஜின் தொழிற்சாலை…. பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு….!!!!

பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அதன் ஒரு பகுதியாக அங்கு பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் தகோட் மாவட்டத்திற்கு நேற்று சென்றார். அப்போது அந்த நகரின் புறநகர்ப் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் உரையாற்றினார். அதில், விடுதலைக்குப் பிறகு இங்கு நீராவி ரயில் என்ஜின் பணிமனை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் தற்போது இங்கு 20 கோடி வரை முதலீட்டில் மின்சார ரயில் என்ஜின் தயாரிக்கும் தொழிற்சாலை ரயில்வே அமைக்க உள்ளது.

அதன் மூலமாக இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் மிகப்பெரிய மையமாக இந்த பகுதி மாறும் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். மேலும் நாட்டின் மின்சார ரயில் என்ஜின் தேவையை பூர்த்தி செய்வதில் இந்த நகரம் முக்கிய பங்காற்றும். வெளிநாடுகளில் கூட இந்த எஞ்சின்களுக்கான தேவை அதிகரித்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மின்சார ரயில் என்ஜின் தொழிற்சாலை அமைவதன் மூலமாக அந்த மாவட்டம் மேலும் வளர்ச்சி பெறும் நிலை தற்போது உருவாகியுள்ளது.

Categories

Tech |