தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்த கட்டுப்பாடுகளை மீறி வெளியில் வரும் மக்களை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். கொரோனா பேரிடர் காலத்தில் காவலர்களின் பணி இன்றியமையாதது. கொரோனா பரவல் காலத்திலும் கடுமையாக உழைக்கும் காவலர்களுக்கு விடுமுறை என்பது அரிது.
இந்நிலையில் மதுரை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா தினமும் 20 சதவீதம் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளித்து வருகிறார். காவலர்களுக்கு ஏற்படும் உடல் சோர்வு, மன உளைச்சல் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.