Categories
உலக செய்திகள்

20-க்கும் மேற்பட்ட கொலை… பிகினி கொலைக்காரர் விடுதலை… சுப்ரீம் கோர்ட் அரசுக்கு உத்தரவு….!!!!!!

இந்திய மற்றும் வியட்நாம் நாடுகளைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்தவர் சார்லஸ் சோப்ராஜ் (78). இவர் 1970 -ஆம் ஆண்டுகளில் ஆசியாவில் 20-க்கும் மேற்பட்ட கொலைகளை செய்த கொடூரன் என அறியப்பட்டவர். மேலும் அவரை கொலைகார பாம்பு, பிகினி கொலைகாரர் மற்றும் பிரெஞ்சு தொடர் கொலைகாரர் எனவும் அழைக்கின்றனர். இவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலாவாசி ஒருவருக்கு விஷம் கொடுத்துள்ளார். மேலும் இஸ்ரேல் நாட்டவரை கொலை செய்தது போன்ற குற்றத்திற்காக இந்தியாவில் 21 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். ஹாங்காங் நாட்டிலிருந்து போலி அடையாளத்துடன் நேபாள நாட்டிற்கு சென்ற சோப்ராஜ் தலைநகர் காட்மண்டுவில் கேசினோ ஒன்றில் வைத்து 30 வருடங்களுக்கு முன்பாக அந்த நாட்டு போலீசாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அமெரிக்காவை சேர்ந்த கான்னி ஜோ போரோன்ஜிக் மற்றும் அவரது காதலியான லாரண்ட் கேரியர் போன்றவர்களை கொலை செய்ததற்காக வெவ்வேறு நாடுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார்  தேடி வந்தனர். கடந்த 2003 – ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து நேபாள சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதியுடன் தண்டனை நிறைவுக்கு வருகிறது. இருப்பினும் நேபாள நாட்டு சட்டத்தின்படி 75 சதவீதம் நிறைவு செய்த மற்றும் சிறைவாசத்தின் போது நல்ல முறையில் நடந்து கொண்டவர் என்ற அடிப்படையில் விடுவிக்க இடமுள்ளது. மேலும் சோப்ராஸ் முன்பே 95 சதவீதத்திற்கும் கூடுதலாக சிறைத்தண்டனை  அனுபவித்து விட்டார். அதனால் வயது முதிர்வு மற்றும் திறந்த நிலையிலான  இறுதி அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை போன்ற காரணங்களை குறிப்பிட்டு நேபாள நாட்டு சுப்ரீம் கோர்ட் அவரை விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |