தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜக அணி கண்டிப்பாக 20 தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என்று மாநில தலைவரும் ,தாராபுர வேட்பாளரான எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னையில் கோயம்பேடு பகுதியில் பத்திரிகையாளர்களுக்கு எல். முருகன் பேட்டியளித்தார் . அவர் பேசியதில், பாஜக வேட்பாளர்கள் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்கான 17 தொகுதியின் பட்டியல் வெளியாகியுள்ளது. இன்னும் மீதியுள்ள மூன்று தொகுதிகளில் வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார். இந்த சட்டமன்ற தேர்தலில் எதிரிகளை சமாளிக்க ,எங்கள் கட்சியினர் அனைவரும் தயாராக உள்ளதாகவும், மேலும் 20 தொகுதிகளிலும் பாஜக அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறினார்.
இந்நிலையில் இவர் போட்டியிடும் தாராபுரம் தொகுதியில் பாஜகவை வெற்றி பெற செய்தால் மருத்துவமனை மற்றும் மகளிர் கல்லூரி போன்ற வசதிகளை ,எங்கள் ஆட்சியில் செயல்படுத்தி காட்டுவோம் என்று தெரிவித்தார். வருகின்ற 18ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதாகவும், கட்சியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன்பிறகு பிரதமர் மோடி மற்றும் அனைத்துக் கட்சிக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கவுள்ள பொதுக்கூட்டமானது கூடிய விரைவில் நடைபெறும் என்று எல் .முருகன் தெரிவித்துள்ளார்.