Categories
மாநில செய்திகள்

20 பகுதிகளுக்கு… திடீர் அபாய எச்சரிக்கை…!!!

சென்னையை அடுத்த 20 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து மணிக்கு 16 கிமீ வேகத்தில் கரையை நோக்கி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் இன்று இரவு புயல் அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும்.

அதனால் திருச்சி, சேலம், நாமக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 75 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி புயல் கரையை கடந்த பிறகு ஆறு மணி நேரம் அதன் தாக்கம் அதிதீவிரமாக தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து நீர் இருப்பு களும் நிரம்பி வழிவதால், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையை அடுத்துள்ள கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், முடிசூர், பெருங்களத்தூர், வரதராஜபுரம், திருமுடிவாக்கம், ஆதனூர், மேற்கு தாம்பரம், பொழிச்சலூர், பம்மல், நந்திவரம், மண்ணிவாக்கம், மணிமங்கலம், அனகாபுத்தூர் மற்றும் திருமுடிவாக்கம் உள்ளிட்ட 20 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |