மாண்டியா மாவட்டம் மலவல்லி தாலுகா ஹலகூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியுடன் பெங்களூரு நந்தினி லே-அவுட்டில் வசித்து வருகிறார். இவர் ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள கார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முகநூலில் அஞ்சலி என்ற பெயரில் கணக்கை தொடர்ந்த ஸ்ரீகாந்த் ஏராளமான பெண்களுடன் நண்பராக இருக்க அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்றுக்கொண்ட பெண்களிடம் ஆபாசமாக பேசியது மட்டுமல்லாமல் புகைப்படம் வீடியோக்களை அனுப்பி வைத்து தொல்லை கொடுத்துள்ளார்.
இதுபோல 20க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார் .இந்நிலையில் ஸ்ரீகாந்த் மீது முகநூல் மூலம் பழக்கமான பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஸ்ரீகாந்தை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.