Categories
சென்னை மாவட்ட செய்திகள்

20 பெண்களை ஏமாற்றிய வாலிபர்…. பாய்ந்த குண்டாஸ்…. போலீஸ் கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

20 பெண்களை காதலித்து ஏமாற்றிய வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

சென்னை மாவட்டத்திலுள்ள புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலை பகுதியில் முகமது செய்யது என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விளம்பர படங்களில் நடித்த முகமது தன்னுடன் நடித்த பெண்களை காதலிப்பது போல நடித்து அவர்களை பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட 3 பெண்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் சுமார் 20 பெண்களை முகமது ஏமாற்றியதாக குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முகமது செய்யதை கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முகமதை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் முகமதை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான நகலை சிறையில் இருக்கும் அவருக்கு அலுவலர்கள் மூலமாக வழங்கினர்.

Categories

Tech |