Categories
உலக செய்திகள்

20 மணி நேர பயணம்…. எவ்வாறு சாத்தியம்….!! வேதனையில் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்கள்…!!!

உக்ரைனில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் அங்கு நிலவும் கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டு  வருகின்றனர். 

உக்ரைன், ரஷ்யாவிற்கு இடையேயான போர் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரைனில் உள்ள பல இந்தியர்கள் சொந்த ஊர் திரும்பும் நிலை கடும் சவாலாக உள்ளது. மத்திய அரசு அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அதற்கு மாணவர்கள்  உக்ரைன் எல்லையைக் கடந்து ருதுமேனியா  போன்ற அண்டை  நாடுகளுக்கு வந்தாக வேண்டும்.

இந்தப் பயணம் அவர்களுக்கு எளிதல்ல. இந்நிலையில் அங்குள்ள சூழ்நிலைகள் குறித்து ஐக்கிய தேசிய மருத்துவ பல்கலைக்கழக மாணவி  லட்சுமி கூறும்போது, “நாங்கள் மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறோம். எல்லையைக் கடந்து செல்ல முடியாது. சுமார் 2000 கிலோ மீட்டர் தொலைவில் நாங்கள் இருக்கிறோம். தற்போது எங்களால் சூப்பர் மார்க்கெட் கூட செல்ல முடியாது. நான் மற்ற மாணவர்களிடம் அவர்களது  தனியார் விடுதிக்கு அருகில் உள்ள கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள ஒரு பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளோம்”  எனக் கூறியுள்ளார்.

மற்றொரு மாணவன் நந்தன்  கூறுகையில், “தற்போது நிலவும் சூழ்நிலைகளால் பதுங்கு குழிகளுக்குள்  இருக்க தான் எங்களுக்கு தெரியும். உணவு, தண்ணீர் எல்லாம் தீர்ந்து போகிறது. தற்போது வாழைப் பழம், பிஸ்கட் சாப்பிடுகிறோம். மேலும் நாங்கள் எங்கள் சிம் கார்டு மூலம் இணையத்தின் உதவியுடன் எங்கள் குடும்பத்தினரிடம்  பேசுகிறோம். இது எத்தனை காலம் நீடிக்கும் என்பது யாருக்கு தெரியும்? என கூறியுள்ளார். இவ்வாறு உக்ரைனில்  சிக்கி தவித்து வரும் இந்திய மாணவர்களை  மீட்டு  நாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

Categories

Tech |