Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

20 மாவட்டத்தில்… என்ன செய்யலாம் ? ஷாக் ஆகி புலம்பும் எடப்பாடி ..!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,881  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 2.50 லட்சத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், மறுபக்கம் நம்பிக்கையளிக்கும் வகையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது. இந்த நிலையில் தான் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகின. அதில், தமிழகத்தில் மேலும் 5,879 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,51,738 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 99 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,034 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 7,010 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,90,966 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கான பரிசோதனை இன்று மட்டும் 58,243 பேருக்கு செய்யப்பட்டுள்ளதால் மொத்தம் 26,18,512 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழக்தில் இன்று 37 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 20 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று  உயிரிழப்புகளை பதிவு செய்த மாவட்டங்கள் :

சென்னை – 27

கோயம்புத்தூர் – 10

மதுரை – 10

திருவள்ளூர் – 7

கன்னியாகுமரி – 6

திருநெல்வேலி – 6

செங்கல்பட்டு – 5

விருதுநகர் – 5

தென்காசி – 4

கடலூர் – 3

திண்டுக்கல் – 3

ராமநாதபுரம் – 2

சேலம் – 2

கள்ளக்குறிச்சி – 2

வேலூர் – 2

திருப்பூர் – 1

தூத்துக்குடி – 1

தேனி – 1

ராணிப்பேட்டை – 1

காஞ்சிபுரம் -1

Categories

Tech |