Categories
தேசிய செய்திகள்

“20 ரூபாய வச்சுக்கோ… வெளியில யார்கிட்டயும் சொல்ல கூடாது”… 6 வயது பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த கொடுமை..!!

6 வயது சிறுமியை தாத்தா மற்றும் மாமா இருவரும் சேர்ந்து பாலியல் கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வாழ்ந்துவரும் 6 வயது சிறுமி தான் பாதிக்கப்பட்டவர். இவர் சில நாட்களாக வித்தியாசமாக நடந்து கொண்டிருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் தாய் என்ன நடந்தது என்று சிறுமியிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சிறுமியின் தாத்தா மற்றும் மாமா சமோசா வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று சிறுமியை கொடூரமாக கற்பழித்தது தெரிய வந்தது. இதை யாரிடமும் கூறக் கூடாது என்று கூறி 20 ரூபாயை கையில் கொடுத்துள்ளனர் .

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் தான் செய்த தவறை ஒப்புக் கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .ஒரு குழந்தைக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியவர்கள் இப்படி நடந்துகொண்டால் என்ன செய்வது ? என்னதான் சட்டங்கள் கடுமையாக பட்டாலும், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதுவும் சிறுமிகளுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.

Categories

Tech |