சென்னை கூடுவாஞ்சேரி அருகே லட்சுமி என்ற பெண் தனது தாய்க்கு நன்றி செலுத்தும் அடிப்படையில் 20 லட்சம் ரூபாய் செலவில் கோவில் ஒன்றை கட்டியுள்ளார். முன்னதாக தந்தையை இழந்த நிலையில், தாய் கூலி வேலை செய்து படிக்க வைத்து லட்சுமிக்கு அரசு வேலையும் வாங்கி தந்துள்ளார்.
இதனிடையில் திருமணம் செய்தால் தாயை பிரிய நேரிடும் என்று நினைத்து, லட்சுமி திருமணம் செய்யாமல் சுருக்கெழுத்தராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு தாய் இறந்த நிலையில், அவர் நினைவாக தற்போது லட்சுமி கோவில் கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு லட்சுமியின் இந்த செயல் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.