Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

20 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

20 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன ஏலசகிரி கிராமத்தில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிப்காட் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பங்குதாரராக இருக்கிறார். கடந்த 8-ஆம் தேதி இந்த  நிறுவனத்தின் ஷட்டர் பூட்டை உடைத்து மர்ம நபர்கள்  உள்ளே புகுந்துவிட்டனர். அதன் பிறகு மர்மநபர்கள்  அங்கிருந்த 48,000 மீட்டர் காப்பர் வயர்கள்,  200 கிலோ இரும்பு பொருட்கள், உதிரி பாகங்கள் என மொத்தம் 20 லட்சம்  ரூபாய் மதிப்பிலான  பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

இதனை அடுத்து மறுநாள் காலை நிறுவனத்திற்கு சென்ற சிவகுமார் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றதை  அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சிவகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது 3 மர்ம நபர்கள் பொருள்களைத் திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |