ஆஸ்திரேலியாவில் 20 வருடமாக இல்லாத அளவுக்கு பணவீக்கம் உயர்ந்துள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டில் 20 வருடங்களாக இல்லாத அளவுக்கு பணவீக்க விகிதமானது உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் புள்ளியல் துறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து ஒரே ஆண்டில் பணவீக்கம் 5.1 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை , புதிய குடியிருப்பு கட்டிடங்களின் விலை மற்றும் கல்வி கட்டணம் போன்ற அன்றாட விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் பிரதமர் ஸ்காட் மோரீசன் அரசு எரிபொருளின் மீது செஸ் வரி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.