Categories
உலக செய்திகள்

20 வருடங்களுக்குப் பின் முதன்முறையாக… விண்ணுக்கு அனுப்பப்பட்ட 7 நிமிடங்களில் நிறுத்தப்பட்ட திட்டம்… நடந்தது என்ன…?

ஜப்பானின் ககோஷிமாவில் உள்ள உச்சினூரா விண்வெளி மையத்தில் இருந்து எப்சிலன்-6 ராக்கெட் மூலமாக எட்டு செயற்கை கோள்கள் விண்ணிற்கு ஏவப்பட்டுள்ளது. இது அனுப்பப்பட்டு ஏழு நிமிடங்களில் நிறுத்தப்பட்டு இந்த திட்டம் தோல்வி அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் எப்சிலன்-6 ராக்கெட் பூமியை சுற்றிவர சரியான நிலையில் இல்லாத காரணத்தினால் தான் இந்த திட்டம் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜப்பான் விண்வெளி கண்டுபிடிப்பு அமைப்பின் தலைவர் ஹிரோஷி யமகாவா இது பற்றி பேசும்போது, முதல் கட்டமாக ராக்கெட் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தோல்வி பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும் ராக்கெட் திட்டமிட்டபடி பூமியின் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்த சரியான நிலையில் இல்லாத காரணத்தினால் ராக்கெட் தானாக அழிந்து கொள்ளும்படி சிக்னல் கொடுக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் ராக்கெட் மற்றும் அதன் பாகங்கள் பிலிப்பைன்ஸ் கிழக்கே கடலில் விழுந்ததாக கூறப்பட்டுள்ளது இந்த நிலையில் ஜப்பானில் 20 வருடங்களுக்குப் பின் நடந்த முதல் ராக்கெட் தோல்வி இதுவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

Categories

Tech |