திரிஷாவின் ஃபிட்னஸ் ரகசியங்கள் குறித்து பார்க்கலாம்.
தமிழ் சினிமா உலகில் இருபது வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் த்ரிஷா. இவர் திரையுலகில் அறிமுகமானதிலிருந்து தற்போது வரை ஒரே மாதிரி ஃபிட்டாகவே இருக்கின்றார். த்ரிஷா இப்படி பிட்னஸாக இருக்க உதவும் டயட் ரகசியங்கள் பற்றி நாம் இங்கு பார்க்கலாம்.
த்ரிஷா எப்போதும் தன்னை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்வதற்காக அதிக தண்ணீர் குடிப்பாராம். தண்ணீர் மட்டும் அல்லாமல் பல சாறுகளையும் அதிகமாக எடுத்துக் கொள்வாராம். டீ, காபி குடிப்பதை விட கிரீன் டீ தான் இவரின் பெரும்பாலான நேரங்களில் தேர்வாக இருக்குமாம். இவரின் காலை உணவு ரொட்டி வகைகள், ஆம்லெட், தயிர் உள்ளிட்டவை அடங்கியிருக்குமாம். த்ரிஷா தினமும் தன்னுடைய உணவில் சிட்ரஸ் அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொள்வாராம்.
அதன்படி எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் பிற சிட்ரஸ் பழங்கள் ஏதாவது அவரது டயட்டில் இருக்குமாம். அவர் தினமும் கட்டாயமாக உடற்பயிற்சி செய்வாராம். மேலும் இவர் யோகாசனங்களிலும் அதிகம் ஆர்வம் காட்டுவாராம். திரிஷாவுக்கு நீச்சல் என்றால் மிகவும் பிடிக்குமாம். எவ்வளவு நேரம் தண்ணீருக்குள் இருக்கச் சொன்னாலும் அவர் மகிழ்ச்சியாக இருப்பாராம். 40 வயதை நெருங்கும் திரிஷா இளமையாக இருப்பதற்கும் பிட்னஸ் உடன் பளபளப்புடன் கூடிய சருமத்துடன் இருப்பதற்கு இதுதான் காரணமாம் குறிப்பிடத்தக்கது.