நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் :
அனைவரையும் கலகலப்பாக வைத்திருக்கக்கூடிய மேஷராசி அன்பர்களே..!! இன்று தீவிர தெய்வ பக்தியால் மன நிம்மதி கூடும். புத்திர பாக்கியம் ஏற்படும். திருவருளாளும் குருவருளாளும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்களை இன்று நீங்கள் சந்திக்க கூடும். புனித பயணங்கள் மேற்கொள்வீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபாரம் வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும். எதிர்பார்த்த நிதியுதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன்களை காண்பார்கள். இன்று புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்க கூடும்.
பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். உங்களுடைய திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாகவே இன்று நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது முக்கியமான காரியத்தை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையையோ எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே காலையில் நீங்கள் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்து இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் வெற்றிகரமாக காரியமாக அமையும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்டமான எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்டமான நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்
ரிஷபம் :
எதிலும் நிதானமாக செயல்படும் ரிஷபராசி அன்பர்களே..!! இன்று மற்றவர்கள் உங்களை ஏமாற்ற கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். அதனால் இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள். இன்று மனைவியின் கழகத்தால் உறவுகளுக்குள் சின்ன சின்ன குழப்பங்கள் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியிடத்தில் சாதகமான சூழல் ஏற்படும். இன்று பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியம் சிறப்பாக கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செல்லும் .இன்று அனைவருடனும் அனுசரித்துச் செல்லுங்கள். அது போதும். இன்று பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் விலகிச் செல்லும். அனைத்து விஷயங்களும் உங்களுக்கு நல்லபடியாக நடக்கும். எதிர்பார்த்த காரியங்கள் சிறப்பாக இருக்கும். ஒரு சில நேரங்களில் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.
பேசும்போது கவனமாக பேசுங்கள். தொழிலில் வாடிக்கையாளரிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். குடும்பத்தில் ஓரளவு கலகலப்பு இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். இன்றைய நாள் ஓரளவு நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும். அதுபோலவே நீங்கள் இன்று காலையில் எழுந்தவுடன் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்
மிதுனம் :
அனைவரையும் அன்பாக வழிநடத்தும் மிதுனராசி அன்பர்களே..!! இன்று வெளியூர் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். பெண்ணின் சிநேகமும் தனக்கென தனி வீடும் வாங்கக்கூடிய எண்ணங்கள் எழும். குடும்பத்தில் சுபகாரிய கொண்டாட்டங்கள் நிறைவேறும். இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். வாகனம் மூலம் செலவு இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வீட்டுக்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மனை வாங்குவதற்கான தடைகள் விலகி செல்லும்.
தொழில் வியாபாரம் சுமாராகவே இருக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். இன்றைய நாள் நீங்கள் வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். மனம் மகிழ்ச்சி கூடும் நாளாகவும் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செய்யும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்து இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் சிவப்பு நிறம்
கடகம் :
தெய்வத்தின் அனுகிரகம் கொண்ட கடக ராசி அன்பர்களே..!! இன்று தனவரவு ஏற்பட்டு மகிழும் நாளாக இருக்கும். புதிய பதவிகள், வாகனம், வசதி வாய்ப்புக்கள் எல்லா விதத்திலும் உங்களுக்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று பழைய சிக்கல்கள் தீர்வதில் மட்டும் கொஞ்சம் தாமதம் பிடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்பத்தில் எதிர் பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் வந்து சேரலாம் பார்த்துக்கொள்ளுங்கள்.
கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்துச் செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை இன்று உண்டாகும் பார்த்துக்கொள்ளுங்கள். அவர்களுக்காக நீங்கள் பாடுபடுவீர்கள். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது பச்சை நிற ஆடையோ அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே காலையில் சூரிய நமஸ்காரம் செய்து இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் பச்சை நிறம்
சிம்மம் :
குடும்பத்திற்காக கடுமையாக உழைத்து பாடுபடும் சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று அன்னையின் ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறை கொள்ளுங்கள். அதிக முயற்சி எடுத்து முன்னேற முயலுங்கள். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். நீர்நிலைகளில் மட்டும் கவனமுடன் செயல்படுங்கள். இன்று திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் சின்ன சின்ன தடை ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்பாராத செலவுகள் இன்று இருக்கும். உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும் கவனமாக இருங்கள். எந்த விஷயம் செய்வதாக இருந்தாலும் மற்றவர்களை அனுசரித்து செய்யுங்கள்.
எதிலும் முழுக்கவனம் இருப்பது நல்லது. பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். வீண் அலைச்சலும் இருக்கும். ஆனால் மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். இன்று ஓரளவு சிறப்புமிக்க நாளாக இருக்கும். மிக முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியங்களை செய்யும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அணிந்து செல்லுங்கள். அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்
கன்னி :
அனைவரையும் கவர்ந்து இழுக்கக்கூடிய கன்னிராசி அன்பர்களே..!! தங்கள் பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டிய நாளாக இன்று இருக்கும். பயணங்களின் போது எச்சரிக்கையாக இன்று இருங்கள். வியாபாரிகளுக்கு தொழிலில் எதிர்பார்த்த லாபம் இருக்காது. பொறுமையாக இருங்கள். இன்று புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வீண் அலைச்சல் இருக்கும். மேல்மட்டத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது மன வருத்தத்தை கொடுக்கும். மன உறுதி இன்று அதிகரிக்கும். சொத்துகளை அடைவதில் இருந்த தடைகள் நீங்கும்.
உயர்நிலையில் உள்ளவர்களிடம் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். விஐபிக்கள் உடன் சந்திப்பு கிட்டும். புதிய நபர்கள் மூலம் உங்களுக்கு பண வரவு கிடைக்கும். இன்றைய நாள் மகிழ்ச்சி கொள்ளும் நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். குடும்பத்தாருடன் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்தாலும் எந்த பிரச்சனையும் இருக்காது. அது போலவே இன்று நீங்கள் முக்கியமான காரியங்களை மேற்கொள்ளும் போது முக்கியமான வேலைகளை செய்யும் பொழுது பச்சை நிற ஆடையோ அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். இன்று முடிந்தால் காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்து இன்றைய நாளை தொடங்குவது வெற்றிக்கு வழி வகுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்டமான எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்
துலாம் :
துணிச்சலுக்கு பெயர் போன துலாம் ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் வாக்குவாதங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. முக்கியமாக வீட்டில் நீங்கள் பேசும் பொழுது கவனமாக பேசுங்கள். அப்பொழுதுதான் இல்லத்தில் அமைதி நிலவும். காரியங்கள் கைகூட கடினமான உழைப்பு தேவைப்படும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கமும் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள்.
பணவரவு நல்லபடியாக இருக்கும். கொடுக்கல்வாங்கல் விஷயங்களும் நல்லபடியாக இருக்கும். பழைய பிரச்சனைகள் மட்டும் கொஞ்சம் தலை தூக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். யாரிடமும் தயவுசெய்து கோபம் ஏதும் படாதீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்கினால் வெற்றி வாய்ப்புகளையும் நாம் பெற முடியும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்
விருச்சிகம் :
குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் விருச்சிகராசி அன்பர்களே..!! இன்று வீண் வம்புக்கு செல்லாமல் இருப்பது மிகவும் நல்லது. பெண்களால் விரைய செலவுகள் கொஞ்சம் ஏற்படும். செலவுகளை குறைக்க அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்கவும். இன்று கஷ்டம் நீங்கி சுகம் ஏற்படும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்க கூடிய சாமர்த்தியம் ஏற்படும்.
உங்களுடைய வாக்கு வன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். வேளை தவறி மட்டும் தயவு செய்து உண்ண வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். வாகனம் வீடு ஆகியவற்றால் செலவு கொஞ்சம் ஏற்படும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. இதை மட்டும் செய்யுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்
தனுசு :
மற்றவர்களுக்கு உதவி செய்வதில் வல்லமைமிக்க தனுசுராசி அன்பர்களே..!! இன்று தனவரவு அதிகரிக்கும். பெண்கள் மூலமாக எதிர்பார்த்த லாபங்கள் கூடும். ஆரோக்கியம் மேம்படும். அனுகூலமான நாளாகவும் இன்று இருக்கும். இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள் கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டியிருக்கும்.
பணி நிமிர்த்தமாக பயணங்கள் செல்ல வேண்டி வரலாம். அதனால் உங்களுக்கு அலைச்சலும் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும். முடிந்தால் காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் மற்றும் நீல நிறம்
மகரம் :
எதையும் சாமர்த்தியமாக செய்யக்கூடிய மகரராசி அன்பர்களே..!! இன்று வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நல்ல திருப்பங்கள் ஏற்படக்கூடிய சூழல் இருக்கும். அரசு உதவிகள், புதிய வேலைவாய்ப்பு, கல்வியில் தேர்ச்சி என அனுகூலமான பலன்களை இன்று எதிர்பார்க்கலாம். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்துப் பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும் .பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது.
சாமர்த்தியமான பேச்சு மூலம் காரிய வெற்றி ஏற்படும். மற்றவர்கள் விவகாரங்களில் தயவுசெய்து தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பஞ்சாயத்துக்கள் செய்யாமல் இருப்பதும் நல்லது. இன்று பொறுமையாக மட்டும் செயல்படுங்கள் அது போதும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ ஆரஞ்சு நிறத்தில் ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள் அனைத்தும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்து இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியத்திலும் வெற்றி வாய்ப்புகளை குறைக்க முடியும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்
கும்பம் :
ரகசியங்களை காப்பாற்றக்கூடிய கும்பராசி அன்பர்களே..!! இன்று எல்லா விதத்திலும் ஏற்றம் தரும் நாளாக இருக்கும். இனிமையான மற்றும் சாதுரியமான பேச்சாற்றலால் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். இன்று பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும்.
எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். பதவிகள் சம்பந்தமான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக இன்று சமாளிப்பீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது கரு நீலத்தில் ஆடையோ அல்லது கரு நீலத்தில் கைக்குட்டையோ எடுத்து செல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே முடிந்தால் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்டநிறம் : கருநீலம் மற்றும் மயில் நீல நிறம்
மீனம் :
தனது மாறுபட்ட கோணத்தில் சிந்தனை செய்வதில் வல்லமைமிக்க மீனராசி அன்பர்களே..!! இன்று உங்கள் செல்வ நிலை சீராக உயரும். அரசால் ஆதாயம் ஏற்படும். பாக்கிய விருத்தி ஏற்படும். இன்று சாதுரியமான பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். பல வகைகளில் மனைவி உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். இன்று எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டுகளை கிடைக்கப் பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
ஆன்மீக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று நீங்கள் மகிழ்வாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது வெள்ளை நிற ஆடையோ அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள் அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். அதே போலவே நீங்கள் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்