கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது செய்யப்பற்றுள்ளனர்.
சென்னையில் கொரோனா காரணமாக மருத்துவர் இறந்து போனார். அவருடைய உடலை அடக்கம் செய்வதற்காக ஆம்புலன்ஸ் மூலமாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு இருக்கக்கூடிய கீழ்பாக்கம் மையானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உரிய அனுமதி பெற்று அங்கு அடக்கம் செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டார்கள். ஆனால் திடீரென அந்த பகுதியில் கூடிய பொதுமக்கள் அங்கு வந்து இங்கு அடக்கம் செய்யக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.
அதே போல கைகலப்பில் ஈடுபட்டதோடு இருந்து விடாமல், ஆம்புலன்ஸ் வாகனமும் அடித்து நொறுக்கினார்கள். ஆம்புலன்ஸ் ஓட்டுநர், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தாக்கப்பட்டனர். இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். இந்த சம்பவம் பெரும் பரபராப்பை ஏற்படுத்தியது.
அதே போல இந்த தாக்குதல் குறித்து டி.பி. சத்திரம், அண்ணாநகர் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தனர். அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல், அரசு உத்தரவை மீறி செயல்படுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் 20 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுபவர்களையும் தேடக்கூடிய பணியில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.