Categories
அரசியல்

வேட்பாளர்களாக மாறிய 20 டாக்டர்கள்…… ஊழல் நோய் சரி செய்யப்படுமா…?

தமிழக மக்களவை தேர்தலில் 20 டாக்டர்கள் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர் .

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகின்றது . இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அதிமுக தலைமையிலான கூட்டணி , திமுக தலைமையிலான கூட்டணி , அமமுக , நாம் தமிழர் கட்சி மற்றும்  மக்கள் நீதி மய்யம் என ஐந்து முனை போட்டியாக இந்த தேர்தல் அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த தேர்தலில் 20 மருத்துவர்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் ,

டாக்டர்களாக களமிறங்கும் பாமக வேட்பாளர்கள் :

அன்புமணி ராமதாஸ் (தர்மபுரி) ,

வைத்தியலிங்கம் (ஸ்ரீபெரும்புதூர்),

கோவிந்தசாமி (கடலூர்)

டாக்டர்களாக களமிறங்கும் திமுக வேட்பாளர்கள் :

திமுக க்கான பட முடிவு

கலாநிதி வீராசாமி (வடசென்னை)

செந்தில்குமார் (தர்மபுரி)

கவுதம சிகாமணி (கள்ளக்குறிச்சி)

டாக்டர்களாக களமிறங்கும் அதிமுக வேட்பாளர்கள் :

வேணுகோபால் (திருவள்ளூர்)

ஜெயவர்தன (தென்சென்னை)

டாக்டர்களாக களமிறங்கும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் :

இளங்கோவன் – தேமுதிக – (திருச்சி )

தமிழிசை சவுந்தரராஜன் – பாஜக – (தூத்துக்குடி)

கிருஷ்ணசாமி – புதிய தமிழகம் – (தென்காசி)

டாக்டர்களாக களமிறங்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் :

காங்கிரஸ் கட்சி க்கான பட முடிவு

விஷ்ணு பிரசாத் (ஆரணி)

செல்வகுமார் (கிருஷ்ணகிரி)

டாக்டர்களாக களமிறங்கும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் :

லோக ரங்கன்  (திருவள்ளூர்)

சுதாகர் (திண்டுக்கல்)

சுப்பிரமணியன் (புதுச்சேரி)

டாக்டர்களாக களமிறங்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் : 

நாம் தமிழர் கட்சி க்கான பட முடிவு

கருப்பையா (கரூர்)

ரமேஷ்பாபு (திருவண்ணாமலை)

கார்த்திகேயன் (மத்திய சென்னை)

பாஸ்கர் (நாமக்கல்)

ஆகிய 20 வேட்பாளர்கள் மருத்துவ படிப்பு படித்து விட்டு அரசியலில் களம் காண வேட்பாளர்களாக இறங்கியுள்ளனர். படித்த டாக்டர்கள் தேர்தலில் வெற்றி பெற்று அரசியலில் இருக்கும் ஊழல் என்ற நோய் சரி செய்யப்படுமா என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது .

Categories

Tech |