Categories
அரசியல் மாநில செய்திகள்

24மணி நேரத்துல 20மணி நேரம்..! மக்களுக்காக உழைக்கும் ஸ்டாலின்… மார்தட்டி பேசும் கழக உடன்பிறப்புகள்…!!

தமிழக அரசின் நிகழ்ச்சியில் பேசிய தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி, திமுக அரசின் நலத்திட்ட உதவிகள், பயனாளிகள் பட்டியல் பொதுவானது. மத வேறுபாடுகள் இல்லை, சாதி வித்தியாசங்கள், இல்லை கட்சி வேறுபாடுகள் இல்லை, யார் எந்த ஊர் என்ற வித்தியாசம் இல்லை, வாக்களித்த மக்கள், வாக்களிக்காத மக்கள் என்ற வித்தியாசம் இல்லை.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை வழங்காவிட்டாலும் 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினராக முதலமைச்சராக இருந்து, அனைத்து தொகுதிகளுக்கான நலத்திட்டங்களை வழங்குவேன் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரசினுடைய நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கின்றார்கள்.

தலைவரின் சொற்களால் சொல்ல வேண்டும் என்று சொன்னால் இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று தலைவர் வழிகாட்டுகிறார். அதனை அரசு பின்பற்றி வருகிறது. கேட்பவர்களுக்கு கேட்டது கிடைக்கிறது, கேட்காதவர்களுக்கு இந்த அரசு தேடிச் சென்று முதலமைச்சர் அவர்கள் உதவிகளை வழங்குகிறார்கள். முதலமைச்சரை பொறுத்தவரையில் ஒரு நாளில் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் நாட்டு மக்களுக்காக உழைக்கின்றார்கள்.

சில நாட்களாக கோவை மாவட்டத்தில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கின்றன, சில பேர் போராட்ட களத்திற்கு அந்த மக்களை தூண்டி கொண்டிருக்கிறார். ஆழியாறினுடைய தண்ணீர் பிரச்சனையை ஒரு அரசியலாக எடுத்துக்கொண்டு, அங்கே மக்களையும் விவசாயிகளையும். அரசு ஏதோ ஒரு மாற்று நினைப்பில் இருப்பதைப் போல ஒரு கருத்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பொறுத்தவரையில் இது அனைவருக்குமான அரசு, எல்லோருக்கும் மன அரசு. இது நம்முடைய அரசு என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு முறையும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |