ருமேனியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 20 லட்சத்தை தாண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ருமேனியாவில் கடந்த ஒரே நாளில் 19,371 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மொத்தமாக அந்நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 20,03,041 ஆக அதிகரித்திருக்கிறது.
மேலும், 44 நபர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பலியாகியுள்ளனர். மேலும், அந்நாட்டில் தற்போது வரை 18 லட்சத்து 19 ஆயிரத்து 315 நபர்கள் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.