Categories
உலக செய்திகள்

“20 லட்சம் மதிப்புடைய கைக்கடிகாரத்தை திருடிய காவலாளி!”….. யாருடையது தெரியுமா….?

அர்ஜென்டினாவை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரரான டியேகோ மாரடோனாவின்  திருடுபோன கைக்கடிகாரம் அசாமில் காவலாளியிடமிருந்து  மீட்கப்பட்டுள்ளது.

டியேகோ மாரடோனா என்ற உலக பிரபலமான முன்னாள் கால்பந்து வீரரின் உடைமைகளை துபாயில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனம் தான் பாதுகாத்து வருகிறது. இந்நிலையில்,  அங்கிருந்த டியேகோவின் 20 லட்சம் மதிப்புடைய கைக்கடிகாரம் காணாமல் போனது. தற்போது, அசாம் காவல்துறையினர் அந்த கைக்கடிகாரத்தை கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது, அந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய காவலரான, வாஜித் உசேன் என்பவர் தான் அந்த கைக்கடிகாரத்தை திருடியிருக்கிறார். அதன்பின்பு, தன் தந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறிவிட்டு விடுப்பு எடுத்து ஊருக்கு சென்றுவிட்டார்.

இவரை, நேற்று அதிகாலை சுமார் 4.00 மணியளவில் அஸ்ஸாம் காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்த கைக்கடிகாரத்தை மீட்டுள்ளனர்.

Categories

Tech |