கர்நாடகாவில், அனைத்து பள்ளிகளிலும் ‘குடிநீர் பெல்‘ முறையை செயல்படுத்த அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகள் தேவையான அளவு குடிநீரை பருகுவதில்லை என்றும், அதன் காரணமாக உடல் ரீதியில் சில பாதிப்புகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாற்றுகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன.
இந்நிலையில் கேரளாவில், குடிநீர் குடிப்பதற்காகவே காலை மற்றும்மதியம் 2 முறை ‘குடிநீர் பெல்‘ நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதே போல கர்நாடகாவிலும் அமல்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் ஏற்கனவே தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் கர்நாடகத்தில் ‘குடிநீர் பெல்‘ முறையை அமல்படுத்த அம்மாநில அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக எல்லா பள்ளிகளுக்கும் கல்வித்துறையின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் காலை முறை, மதிய உணவுக்கு பின் ஒரு முறை என்று நாள் ஒன்றுக்கு 2 முறை இந்த ‘குடிநீர் பெல்‘ ஒலிக்க பட வேண்டும். ஒவ்வொரு பெல்லுக்கும் 10 நிமிடம் என்ற வீதத்தில் 20 நிமிடம் ஒதுக்க வேண்டும். என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.