Categories
கிரிக்கெட் விளையாட்டு

20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்த 4 அணிகள்….! வெல்வதற்கான வாய்ப்பு இருக்கு – வாசிம் அக்ரம் கணிப்பு …!!!

இந்த ஆண்டு நடைபெற உள்ள 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில், எந்த அணி வெற்றி பெறுவர் என்பது குறித்து , முன்னாள்  வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், இந்தப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்ற ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில், எந்த அணி வெல்லும் என்று முன்னாள்  வீரர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம்,  20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை 4 அணிகள் வெல்வதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “இந்தப்போட்டியில் இந்திய அணி வெல்வதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகின்றது.  இந்திய அணி 20 ஓவர் போட்டியை பயமின்றி விளையாடும் அணுகுமுறையை  கொண்டிருக்கிறது.

அதேபோல் இங்கிலாந்து , நியூசிலாந்து அணிகளும்  வெல்வதற்கான  வாய்ப்புகள் காணப்படுகிறது. ஆனால் ஒரு பாகிஸ்தான் வீரராக 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியை எங்களுடைய அணி வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி இந்த போட்டியை வென்றுவிட்டால் எங்களுடைய கனவு நனவாகும். ஆனால் பாகிஸ்தான் அணியின் சரியான வீரர்களின் கலவையை தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு செய்து விட்டால் , சிறந்த அணியை பெற்று  கடுமையாக போராட முடியும். இதில் குறிப்பாக 5 மற்றும் 6வது ஆர்டரில்  உள்ள பிரச்சனையை, முதலில் தீர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் பாகிஸ்தான் அணிக்கு வலுவான வாய்ப்பு இருக்கும். அதுபோல வெஸ்ட் இண்டீஸ் அணியை பற்றி கணித்து சொல்ல முடியாது. ஒருவேளை போட்டித் தொடரில் முன்னணி வீரர்கள் களமிறங்கினார் ,அந்த அணி மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்”, என்று அவர் கூறினார்.

Categories

Tech |