Categories
கிரிக்கெட் விளையாட்டு

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு ….கால அவகாசம் கேட்கப்படும்- பிசிசிஐ முடிவு …!!!

20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்த ,ஐசிசி- யிடம் கால அவகாசம் கேட்க, பிசிசிஐ முடிவு செய்துள்ளது .

7 வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி,  இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டி நடத்துவதற்கான 9 இடங்களை குறித்தும் பிசிசிஐ கடந்த ஏப்ரல் மாதத்தில், ஐசிசி-யிடம் பரிந்துரை செய்திருந்தது. அதன்படி சென்னை, மும்பை, தர்மசாலா, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூர், அகமதாபாத், லக்னோ ஆகிய இடங்களில் போட்டிகள் நடத்த திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று  பரவல் அதிகரித்திருப்பதால், 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறுமா ? என்று கேள்வியும் எழுந்துள்ளது. நேற்று நடைபெற்ற பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை குறித்து, ஐசிசி-யிடம் ஒரு மாத கால அவகாசம் கேட்பது குறித்து நேற்று முடிவு செய்யப்பட்டுள்ளது . இதுபற்றி பிசிசிஐ  செயலாளரான ஜெய்ஷா கூறும்போது, ” 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துவது குறித்து, ஐசிசி-யிடம் கால அவகாசம் கேட்டு ,அதன்பின்  முடிவு செய்வோம்.

தற்போதைய சூழலில்  ,பாதுகாப்பான இடத்தில்தான் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளோம் “, என்று அவர் கூறினார். வருகிற 1 ம் தேதி ஐசிசி-யுடன் நடைபெற உள்ள  கூட்டத்தில் , பிசிசிஐ 20 ஓவர் உலக கோப்பை போட்டியை  நடத்துவது  பற்றி , கால அவகாசம் கேட்கப்படும். இதில் பங்கேற்கும் இந்திய  கிரிக்கெட் வாரிய தலைவரான  கங்குலி இதனை வலியுறுத்துவார். ஐசிசி-யிடம் அவகாசம் கேட்பதற்கு முக்கியமாக 2 காரணங்கள் உள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதால் , 20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து எந்த முடிவுயும் எடுக்க முடியவில்லை என்பதால் , பிசிசிஐ கால அவகாசம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.அதோடு  ஐசிசி உலக கோப்பைக்கு  மத்திய அரசிடமிருந்து  கிரிக்கெட் வாரியம் வரி விலக்கு பெற வேண்டி  இருப்பதாலும்  கால அவகாசம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |