பிரேசிலில் சமீப நாட்களாக கொட்டி தீர்த்து வரும் பலத்த மழையால் 20-க்கு மேற்பட்ட மக்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டின் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி மக்கள் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு சமீப நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாரா என்னும் மாகாணத்திலுள்ள பல பகுதிகளில் வெள்ளம் உருவானது.
மேலும் பலத்த மழையால், பாஹியா மாகாணத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கியது. மேலும், அம்மாகாணத்தின் தென் கிழக்கு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 20க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 19,000 மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி, வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.