Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பேருந்தில் 20 பேர்… வேனில் 7 பேர்… காரில் 3 பேர்…. e-Pass இல்லாமல் போக்குவரத்து அனுமதி …!!

தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல புதிய தளர்வுகள் அடிப்படையில் ஊரடங்கு படிப்படியாக விலக்கிக் கொள்வதற்கான பரிந்துரை செய்யப்பட்டு அதன் அடிப்படையில் கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு தளர்வுகள் வழங்கப்படுகிறது. இதில் நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

e-Pass இல்லாமல் பேருந்து இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 20 நபர்களும், வேன்களில் 7 நபர்களும், கார்களில் மூன்று நபர்களும்,  சிறிய கார்கள் என்றால் இரண்டு நபர்கள் இது செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்களில் வாடகை மற்றும் டாக்சி வாகனங்களை அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். வேளாண்மை, வியாபாரம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

Categories

Tech |