ஏமன் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் மீது அரசு படை நடத்திய தாக்குதலில் 20 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி என்ற கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து உள்நாட்டு போர் புரிந்து வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த அரசின் ஆதரவு படையும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றது. இருவருக்கும் இடையே ஏற்படும் மோதலில் இரண்டு தப்பினருக்கும் சேதாரம் ஏற்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் நடந்த தாக்குதலில் 20 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ஏமன் நாட்டு அரசு ஆதரவு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், தலியா பகுதியில் உள்ள குவெட்டாபா நகரின் அருகே முக்கிய ராணுவ தளங்கள் அமைந்துள்ளன. இதை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.ஆனால் இவர்களின் இந்த முயற்சி அரசுப் படையால் தடுக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் நடத்திய பதிலடி தாக்குதலில் 20 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அறிக்கை இடம் பெற்றுள்ளது.