கரூர் அருகே ஒரு பெட்ரோல் பங்கில் 20 திருக்குறளை ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று அறிவித்து மாணவர்களை திருக்குறள் படிக்க தூண்டி வருகின்றனர்.
கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாகப் பள்ளியில் உள்ள பெட்ரோல் பங்கில், பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து பத்து திருக்குறள் ஒப்புவித்தல் அரை லிட்டர் பெட்ரோல் இலவசம். 20 திருக்குறள் ஒப்புவித்தல் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஜனவரி 14 முதல் இந்த ஊக்க சலுகை வழங்கப்படுவதை அறிந்த மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்து திருக்குறளை ஒப்புவித்து இலவசமாக பெட்ரோல் வாங்கி செல்கின்றனர். மாணவர்கள் சிறுவயதிலேயே திருக்குறள் படிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த ஊக்க சலுகை வழங்கப்படுவதாக பங்க் உரிமையாளரும், தமிழ் ஆர்வலருமான செங்குட்டுவன் கூறியுள்ளார்.