Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

20 Sec ரிங் …. ”Missed call கொள்ளை”…. ஜியோ_வின் நூதன மோசடி…. ஏர்டெல் பரபரப்பு புகார்…!!

ஜியோ டெலிகாம் நிறுவனம் குறித்து ஏர்டெல் நிறுவனம் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் புகார் அளிக்க இருக்கின்றது.

ஒருவர் உங்களது தொலைபேசியை அழைக்கும் போது வரும் ரிங்டோன் எவ்வளவு நேரம் ஒலிக்கிறது என்று நீங்கள் கவனித்திருக்கிறீர்களா ? ஏர்டெல் மட்டும் ஜியோ நிறுவனத்திற்கு இடையில் நடக்கும் சண்டை தற்போது நம் கவனத்தை இதன் பக்கம் திருப்பி இருக்கிறது. தொலைபேசி அழைப்புகளுக்கு விதவிதமாக ரிங்டோன்களையும் , காலர் டோன் களையும் வைத்து ட்ரெண்ட் செட் செய்வதே இக்கால இளைஞர்களின் வாடிக்கை. அப்படி வைக்கப்படும் காலர் டோன் முதல் செலுத்தப்படும் கால் கட்டணம் வரை விதவிதமான பல சலுகைகளை வாடிக்கையாளருக்கு வழங்கி கொண்டிருக்கும் முதன்மையான டெலிகாம் நிறு வனங்களில் ஏர்டெல்_லும் , ஜியோ_வும் முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது.

ஒருவரின் தொலைபேசியை அழைக்கும் போது வரும் ரிங்டோன் நேரத்தை வைத்து ஏர்டெல்_லுக்கும், ஜியோ விற்கும் இடையே தற்போது சண்டை மூண்டுள்ளது. ஏர்டெல் , வோடபோன் உள்ளிட்ட டெலிகாம் நிறுவனங்களில் இருந்து ஒருவர் ஜியோவிற்கு தொடர்பு கொள்ளும் போது ரிங் ஆகும் ரிங்டோன் நேரத்தை ஜியோ 20 வினாடிகள் ஆக குறைத்துள்ளது தான் இந்த சண்டைக்கு காரணம். ரிங் டோன் நேரத்தை குறைப்பதால் யாருக்கு என்ன பிரச்சனை என்று பார்க்கும் போதுதான் ரிங்டோன் கால அளவை குறைப்பதற்கு பின்னாலிருக்கும் ஜியோ நிறுவனத்தின் தந்திரம் புலப்படுகிறது.

நீங்கள் ஏர்டெல்_லில் இருந்து ஜியோவுக்கு கால் செய்கிறீர்கள் என்றால் உங்கள் அழைப்பை ஏற்கும் இடத்தில் இருக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு வெறும் 20வினா டிகள் மட்டுமே ரிங்டோன் அடிக்கும் , போனுக்கு கால் வருகிறது என்பதை வாடிக்கையாளர்கள் சுதாரிப்பதற்குள் அது மிஸ்டுகால் ஆக மாறிவிடும். மிஸ்டு காலை பார்த்துவிட்டு நீங்கள் மீண்டும் ஏர்டெல் வாடிக்கையாளருக்கு கால் செய்வீர்கள். அப்படி செய்வதனால் ஏர்டெல்_லின்  ஒரு அவுட்கோயிங் கால் இன்கம்மிங் கால் ஆக மாறிவிடுகிறது.

இணைப்புக் கட்டணம் விதிகளின்படி இன்கமிங் அழைப்பை பெரும் ஏர்டெல் நிறுவனம் தனக்கு அழைப்பு விடுத்திருக்கும் ஜியோ விற்கு ஒரு காலுக்கு 6 பைசா கொடுக்க வேண்டும்.இது இயல்பாக நடக்கும் பட்சத்தில் பிரச்சினை இல்லை. ஆனால் 45 விநாடிகள் அடிக்க வேண்டிய ரிங்டோனை 20 வினாடிகள் குறைத்து தனது தனது அவுட்கோயிங் கால்களை அதிகரித்து கொள்கிறது ஜியோ நிறுவனம். தற்போதைய இந்த குற்றச்சாட்டின் மூலம் தனது டெலிகாம் டிராபிக் ரேட்டிங்கை உயர்த்தி ஜியோ லாபம் பார்க்க நினைப்பதாகவும் சர்ச்சை வெடித்திருக்கிறது.

இந்த குற்றச்சாட்டை ஏர்டெல் நிறுவனம் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் முறையிட இருக்கிறது. வெளிநாட்டு டெலிகாம் நிறுவனங்களின் ரிங்டோன் நேரம் வெறும் 15 லிருந்து 20 விநாடிகள் மட்டுமே இருக்கிறது என்று சொல்லி ஜியோ இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்தாலும் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் நூதன வழியில் தொலைத்தொடர்பு வசதிகள் இதுபோன்ற சிக்கல்களை ஏற்படுத்த முடியுமா என்ற கேள்வியும் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Categories

Tech |