சினிமா என்பது ஒரு மாய கண்ணாடி தான் கேமரா இருக்கும்போது ஜொலிக்கும் நட்சத்திரங்கள் மவுஸ் போனவுடன் காணாமல் போய்விடுகிறார்கள்.
இயக்குனர் பாரதிராஜா இயக்கிய என்னுயிர் தோழன் திரைப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி அதற்குப் பின் 4-5 படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் பாபு கடந்த 20 வருடமாக படுத்த படுக்கையிலேயே கிடக்கிறார். நடித்த முதல் படத்திலேயே முத்திரை பதித்த நடிகர் பாபு அதன்பிறகு 14 படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். “மனசார வாழ்த்துகிறேன்” என்ற படத்தின் ஒரு காட்சியில் மாடியில் இருந்து குதித்து படுகாயம் ஏற்பட்டது.
தீவிர சிகிச்சை அளித்த பின்பு இவர் உயிர் பிழைத்த போதிலும், பாபு அதன்பிறகு நடமாட முடியவில்லை. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட இயக்குனர் பாரதிராஜா அவரை நேரில் சந்தித்து இருக்கிறார். அவரை பார்த்தவுடன் படுத்த படுக்கையில் இருந்த நடிகை பாபு கையை தூக்குவது போன்ற வீடியோ காட்சி தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. ஒரு சண்டைக் காட்சிக்காக நடிக்கப் போய் கிட்டதட்ட இருபது வருடமாக படுத்த படுக்கையிலேயே இருக்கிறாராம்.
அவரைக் கண்ட பாரதிராஜா கண்கலங்கினார். 1990 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட என்னுயிர் தோழன் படத்தில் நடித்த பாபு ஹீரோவாக இருந்த அரசியல் கட்சித் தொண்டராக வந்து சிறந்த நடிப்புக்காக பாராட்டப் பெற்றவர். இந்த வெளிச்சத்தில் அடுத்தது பட வாய்ப்புகள் குவிந்தன. பொண்ணுக்கு சேதி வந்தாச்சு, தாய்மாமா உள்ளிட்ட நான்கைந்து படங்களில் நடித்துள்ளார்.
https://twitter.com/kayaldevaraj/status/1347793599757307907