கடந்த சில வாரங்களாக 200க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று யாருக்கும் உறுதியாகவில்லை என சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவின் 2ஆம் அலை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் கடந்த 24 மணி மட்டும் நேரத்தில் 4,01,078 பேர் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக 4 லட்சம் மேற்பட்டோருக்கு தொற்று பதிவாகியுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதிலும் உள்ள பல மாவட்டங்களில் இரண்டு வாரங்களாக தொற்று யாருக்கும் உறுதியாகவில்லை என சுகாதாரத்துறை மந்திரி ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சுமார் 252 மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை என தெரிவித்துள்ளனர். 180 மாவட்டங்களில் கடந்த 7 நாட்களிலும், 18 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களிலும், 54 மாவட்டங்களில் 21 நாட்களிலும் எந்த வித தொற்று பாதிப்பு உறுதியாகவில்லை என ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டங்களின் பெயர்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.