200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்..
சென்னை ராயப்பேட்டையில் தென்னிந்திய கிறிஸ்தவ திருச்சபையின் பவள விழாவை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது அவர், தென்னிந்திய திருச்சபை இன்னும் நூற்றாண்டு காலம் பயணிக்க வேண்டும்.. மக்களால் உருவாக்கப்பட்ட அரசில் வாக்களிக்காத நபர்களுக்கும் சேர்த்து எனது பணி இருக்கும்.. தேர்தலில் 500க்கு மேற்பட்ட வாக்குறுதிகளில் 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கம்பீரமாக கூறுவோம்.. திருச்சபையின் உடைய 75 ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உங்களை சந்திக்க வாய்ப்பினை பெற்றதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.
மேலும் பணிகளின் காரணமாகத்தான் நான் சுருக்கமாக உங்களிடத்தில் உரையாற்றி விட்டு இந்த விழாவில் கலந்து கொண்டு, உங்களை சந்தித்து விட்டு விடைபெற வேண்டும் என்று உணர்வோடு வந்திருக்கிறேன்.. நீங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டு அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.. நன்றி வணக்கம் என்று கூறினார்.