ஆபாசமாக பேசியதாக கூறி சரக்கு ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிக்க முயன்ற நிலையில் பொதுமக்கள் உதவி ஆய்வாளர் இடம் வாக்குவாதம் செய்தனர்.
திருப்பூரில் உதவி ஆய்வாளர் ஒருவர் கூலிபாளையம் 4 ரோடு பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் காலை கட்டிட பொருட்களை ஏற்றிக்கொண்டு புதிய பேருந்து நிலையம் நோக்கி வந்திருக்கிறார். சோதனைச் சாவடியில் அவரை மடக்கிய ஊத்துக்குளி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜமூர்த்தி சீட் பெல்ட் அணிய வில்லை என கூறி 200 ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் சீட் பெல்ட் அணிந்ததுடன் அனைத்து ஆவணங்களும் வைத்திருந்ததாக கூறும் அர்ஜுன் ராஜு பணம் தர மறுத்துள்ளார். அவரை உதவி ஆய்வாளர் ராஜமூர்த்தி ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து டீசலை உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற அர்ஜுனை தடுத்த பொதுமக்கள் உதவி ஆய்வாளர் இடம் வாக்குவாதம் செய்தனர்.