Categories
மாநில செய்திகள்

“200% உயர்வு” தமிழக அரசின் அடுத்த ஷாக் நடவடிக்கை….?‌ காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் எம். யுவராஜா ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் கடந்த 2012-ம் ஆண்டு நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் நிலங் களுக்கான வழிகாட்டி மதிப்பு 33 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த வழிகாட்டி மதிப்பை தற்போது 200 சதவீதம் வரை உயர்த்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஒரு கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலத்திற்கு வழிகாட்டி மதிப்பு 4 லட்ச ரூபாயாக இருக்கும். அந்த நில உரிமையாளர் வங்கி கடன் பெரும் நோக்கத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு ஒரு ஏக்கர் கைமாறுவதாக பத்திர பதிவு செய்திருப்பார்.

இதை அடிப்படையாகக் கொண்டு அந்த பகுதியில் உள்ள அனைத்து நிலங்களுக்கும் 10 லட்ச ரூபாய் வழிகாட்டி மதிப்பாக நிர்ணயிக்கப்படும். ஏற்கனவே கொரோனா தொற்றால் பொதுமக்கள் நிதி நெருக்கடியில் இருக்கின்றனர். இதில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சொத்துவரி உயர்வு, மின்கட்டண  உயர்வு என மக்களை அடுத்தடுத்து வஞ்சிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வழிகாட்டி மதிப்பை 200 சதவீதமாக உயர்த்துவது ஏழை, நடுத்தர மக்களின் வீடு மற்றும் நிலம் வாங்கும் கனவை சுக்கு நூறாக உடைப்பது போன்றதாகும்.

இதே பஞ்சாப் மாநிலத்தில் ஒரு விவசாயி நிலம் வாங்க வேண்டும் என்றால் பத்திரப்பதிவுக்கான பணத்தை மட்டும் செலவு செய்தால் போதுமானது. நில வழிகாட்டுதல் மதிப்பை கட்ட வேண்டாம். பொதுமக்களுக்கு நல்லது செய்யும் வகையில் திமுக அரசு ஏதாவது செய்யும் என்று பார்த்தால், மக்களை வாட்டி வதைக்கும் விதமாக மக்கள் விரோத போக்கையே கடைபிடிக்கிறது. போலி விளம்பரங்களை செய்து பொதுமக்களை ஏமாற்றுகிறது. இனியாவது வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்யுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |