தமிழ்நாடு மின் நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால் மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவும் மின் கட்டணத்தை உயர்த்துவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்தார். இதனை கண்டித்து கோவையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் பேசிய வானதி சீனிவாசன் தெற்கு தொகுதி ரேஸ் கோர்ஸ் ரோடு என எந்த ரோட்டில் போனாலும் சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனை பற்றி எப்போது சட்டமன்றத்தில் கேட்டாலும் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி ரூ.200 கோடி நிதி ஒதுக்கியதாக கூறுகிறார்.
அந்த ரூ.200 கோடி எங்கே என்று எங்களுக்கு தெரியவில்லை. இன்னும் சாலைகளும் சரியாகவில்லை. அதனை தொடர்ந்து கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான பிரதமர் மோடி ரூ.500 கோடி ஒதுக்கினார். மேலும் இன்னொரு ரூ.500 கோடி வேறு விதங்களில் ஒதுக்கினார். கிட்டத்தட்ட ஸ்மார்ட் 90% வேலைகள் முடிந்த பிறகு குளங்கள் பார்த்தால் ஆகாயத்தாமரை மற்றும் ஆங்காங்கே புல்லும் பூண்டுமாக தான் இருக்கிறது. இதனை அதிமுக முறையாக பயன்படுத்தவில்லை. மேலும் மக்களை ஏமாற்றவே திமுக அரசு உள்ளது என்று அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.