Categories
மாநில செய்திகள்

200 பேரை பலி கொண்ட கோர தினம் இன்று….. 66 ஆண்டுகள் நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!

அரியலூரில் மாவட்டத்தில் மிகப்பெரிய ரயில் விபத்து நடந்த நாள் இன்று. அப்போது ரயில் பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்தார் பலர் ஜலசமாதி அடைந்து நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்.நடைபெற்றது. அந்த சம்பவம் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். அரியலூரில் கடந்த 1956 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி நடந்த விபத்து இந்தியாவையே உலுக்கியது. அதாவது விபத்துக்கு முந்தைய நாள் இரவு 9:30 மணிக்கு சென்னை எழும்பூர் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி விரைவுரையில் 13 பெட்டிகளில் 800 பயணிகளுடன் புறப்பட்டது. அப்போது நீராவி என்ஜின் இனைக்கப்பட்ட அந்த ரயில் கொட்டு மழையிலும் கிளம்பியது. ரயில் சென்ற பாதை எல்லாம் இடைவிடாமல் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அன்று நள்ளிரவு நேரத்தில் விருதாச்சலம் ரயில் நிலையத்தை அடைந்ததும் ரயிலின் கடைசி பெட்டி அகற்றப்பட்டது. அது சேலம் செல்லும் இணைப்பு ரயிலில் மாற்றப்படுவதற்காக தனியாக நிறுத்தப்பட்டது. 12 பெட்டிகளுடன் தூத்துக்குடி ரயில் அங்கிருந்து புறப்பட்டது. அதனை தொடர்ந்து அதிகாலை 5.30 மணிக்கு சூரியன் கண்விழிப்பதற்கு முன்பாக ரயில் அரியலூரை தாண்டி திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அரியலூர் மருதையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட ரயில்வே பாலத்தை மூழ்கடித்த நிலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது.

இந்த அபாயகரமான பாலத்தை ரயில் கடந்து செல்ல வேண்டும். ஆனால் போதுமான வெளிச்சம் இல்லாததால் ரயிலை இயக்கிய ஓட்டுனர் துரைசாமி, ஃபயர் மேன் முனுசாமி, கோதண்டன் ஆகியோரின் கண்களுக்கு வெள்ளத்தின் அபாயம் நிலை தெரியவில்லை. வேகமான நீரோட்டத்தால் பாலத்தின் தூண்களும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. ரயில் என்ஜின் பாலத்தை கடக்கும் முயன்ற போது ரயில் பெட்டிகள் ஒன்றின் பின் ஒன்றாக முன்னேறி சென்ற நிலையில் பாரம் தாங்காமல் பாலம் அப்படியே வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் நிலைகுலைந்து ரயில் பெட்டிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனையடுத்து என்ன நடக்கிறது? என்று தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அபாய குரல் எழுப்பியும் காப்பாற்றுவதற்காக யாரும் இல்லை. ரயிலில் உள்ள முதல் ஏழு பெட்டிகளை வெள்ளம் மூழ்கடித்தது. அதிலும் என்ஜினுக்கு அடுத்த பெட்டி பெண்கள் பெட்டியாக இருந்ததால் அதில் பயணித்த பெண்கள், குழந்தைகள்தான் நீருக்கு அடியில் சிக்கிக் கொண்டு உயிரிழந்தனர்.

இந்த கோர சம்பவத்தில் 250 பேர் தண்ணீருக்குள் ஜீவசமாதி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மீட்பு குழுவினர் அங்கு விரைந்து வந்தனர். ஆனால் இரண்டு நாட்கள் போராட்டத்திற்கு பிறகும் 150 சடலங்கள் மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது. பலரது உடல்களை அடையாளம் தெரியாத அளவுக்கு அழகிய நிலையில் மீட்கப்பட்டது. ஒரு சில பெட்டிகள் மண்ணுக்குள் புரிந்ததால் தண்ணீர் வந்த பிறகு அதை இடத்தில் தீ வைத்து கொளுத்தப்பட்டது. கடைசி பெட்டியில் இருந்த கார்டுகளான வைத்தியநாதசுவாமி, ஆறுமுகம், பின் வரிசை பட்டியலில் இருந்த பயணிகள் உயிர் தப்பினார். இந்த கோரசம்பவம் இன்றும் பேசப்பட்டு வருகிறது. இந்தியாவே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி பதவியை ராஜினாமா செய்தார். இணை அமைச்சராக இருந்த தமிழகத்தை சேர்ந்த அழகேசன் பதவி ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். இந்த விபத்து வரலாற்றில் கருப்பு எழுத்துகளால் பதிவான இந்த கோர நிகழ்வு எத்தனை ஆண்டுகள் கடந்தால் நெஞ்சை உலுக்கும் சம்பவமாக தான் உள்ளது.

Categories

Tech |