கே.ஜி.எப் 2 பட டீஸர் யூடியூபில் 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது .
கன்னட திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இதில் யாஷ், ஸ்ரீநிதி செட்டி, சஞ்சய்தத், ரவீனா டாண்டன், ரமேஷ் ராவ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
You Gangsters made our Monster fearless & unstoppable 🔥#KGF2Teaser200MViewshttps://t.co/3xoDtHZ0be@TheNameIsYash @prashanth_neel @VKiragandur @hombalefilms @duttsanjay @TandonRaveena@SrinidhiShetty7 @excelmovies @AAFilmsIndia @VaaraahiCC @PrithvirajProd @DreamWarriorpic pic.twitter.com/D7Wkd7H1te
— Hombale Films (@hombalefilms) July 16, 2021
கே.ஜி.எப்-2 படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்திருந்தது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் டீஸர் வெளியாகி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது . இந்நிலையில் கே.ஜி.எப்-2 படத்தின் டீஸர் யூடியூபில் 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மிரட்டலான சாதனை படைத்துள்ளது. தற்போது இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.