தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் எரிமலை சீற்றத்தில் இருந்து இரண்டு மனித எலும்பு எச்சங்களை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய ரோமப் பேரரசின் பாம்பீன் நகரத்தை அழித்த எரிமலை சீற்றத்தில் தற்போது இரண்டு மனிதர்களின் உடல்கள் இத்தாலியில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் எரிமலை வெடித்து சிதறியபோது தஞ்சமடைய இடம் தேடிய போது எரிமலை குழம்பால் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று தொல்பொருள் இயக்குனர் மாசிமோ ஓசன்னா கூறுகிறார். கி.பி79 ல் விசுவியஸ் என்ற எரிமலை சீற்றத்தால் மொத்த நகரமும் மூழ்கியுள்ளது.
இந்த எரிமலை சீற்றம் பாம்பீ நகரத்தையும் அங்கு கூடியிருந்த மக்களையும் எரிமலை சாம்பல் புதைத்து விட்டது. தற்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த இடம் ஆய்வு செய்வதற்கான ஒரு பெரிய வளமான ஆதாரமாக மாறி உள்ளது. இந்த மாதம் பண்டைய கால நகரத்தில் ஒரு பெரிய மாளிகை வீட்டை ஆராய்ச்சி செய்தபோது தான் இந்த 2 நபர்களின் எலும்பு எச்சங்களையும் கண்டெடுத்துள்ளனர்.
புதைந்து போன அந்த செல்வந்தர் 30 முதல் 40 வயதிற்குட்பட்ட ஆக இருக்கலாம் என்றும், அவரது கழுத்துக்குக் கீழே கம்பளி ஆடை பதிந்து காணப்பட்டுள்ளன என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மற்றொரு நபரின் வயது 18 முதல் 21 வயதுக்குட்பட்டதாக இருக்கலாம் என்றும், இது வெப்ப அதிர்ச்சியால் ஏற்பட்ட மரணம் என்பதை, இறுகி இருக்கும் அவர்களின் கால்களும், கைகளும் நிரூபிக்கின்றன என்று கூறியுள்ளனர். இது எரிமலை சீற்றம் நடந்ததற்கான மலைக்க வைக்கக் கூடிய ஒரு அசாதாரணமான சாட்சியமாக உள்ளது என்றும் செய்தியாளர்களிடம் ஓசன்னா தெரிவித்துள்ளார்.