கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் 100 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நாட்டையே ஆட்டி படைக்கின்றது. நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என்று சுகாதாரத்துறை அமைசர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலமே 18 பேர்க்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போது மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளது. மனைவியிடமிருந்து கணவர், மகனுக்கு பரவியுள்ளது. தனிமைப்படுத்தலை மீறுவோர் மீது பொதுசுகாதார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரது உடல்நிலையும் சீராக இருக்கிறது. கொரோனா நோய் தடுப்பில் தமிழக அரசு நன்கு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது. எவ்வளவு கண்காணிப்பில் ஈடுபட்டாலும் அதை மீறி தனிமைப்படுத்துததிலிருந்து வெளியே சுற்றுகிறார்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்துவதை அவசியம் பின்பற்ற வேண்டும். கொரோனா சிகிச்சைக்காக நாளை புதிதாக 100 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.