Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஜூன் 1 முதல் 200 பயணிகள் ரயில் இயக்கப்படும் – மத்திய அரசு தகவல் …!!

நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி முதல் 200 பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான்காவது கட்ட ஊரடங்கு மே 31ம் தேதி வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனிடையே பல்வேறு தளங்களையும், பல்வேறு சலுகைகளையும் மத்திய அரசு கொடுத்துள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலம் திரும்புவதற்காக சிறப்பு ரயில்களை முக்கிய நகரங்களில் இருந்து இயக்கி வருகின்றது.

இந்த நிலையில்தான் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் நாடு முழுவதும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் 200 பயணிகள் ரயில்கள் இயக்கப்படும். இவை அனைத்தும் வழக்கமான அட்டவணை படி ஏசி இல்லாத ரயில்களாக இயங்கும். இதற்கான அட்டவணையை ரயில்வே துறை வெளியிடும். இதற்க்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகமானவர்கள் தங்களது மாநிலங்களுக்கு திரும்பிச் செல்ல உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |