Categories
அரசியல்

செம ட்விட்ஸ்ட் பா…. தி.மு.கவிலிருந்து அதிமுகவில் குதித்த 200 பேர்… அங்கு அங்கீகாரம் கிடைக்கலையாம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூரில் திமுகவை சேர்ந்த 200க்கும் அதிகமானோர் அதிமுகவில் இணைந்திருக்கிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பேராட்சிக்கு உட்பட்டிருக்கும் 2-ஆம் வார்டில் இருக்கும் பாரம்பரியமாக திமுக குடும்பத்தில் உள்ள குமரேசன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சுமார் 200க்கும் அதிகமானோர் இன்று அதிமுகவில் இணைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு புதிதாக கட்சியில் சேர்ந்தவுடன் கட்சியின் உறுப்பினர் அட்டை கொடுக்கப்பட்டது.

அதன்பின்பு குமரேசன் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சி.வி ராஜேந்திரன், அவர்களின் தலைமையில் ஊர்வலம் சென்று பர்கூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்தார்கள்.

இதுபற்றி குமரேசன் தெரிவித்ததாவது, பர்கூர் பேரூர் கழகத்தில் கட்சிக்காக பாடுபட்டவர்களுக்கும், உண்மையாக உழைத்த தொண்டர்களுக்கும் தகுந்த அடையாளம் மற்றும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. தி.மு.க ஆட்சியில் செல்வந்தர்கள் மற்றும் குண்டர்களின் தலையீடு அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |