Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய 200 மக்கள்!”…. விமானங்களில் அழைத்து சென்ற பிரபல நாடு….!!

ரஷ்யா நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு நிவாரணப் பொருட்களை, ராணுவ விமானங்களில்  அனுப்பியதோடு, அந்நாட்டிலிருந்த தங்கள் மக்களையும் அழைத்துச் சென்றிருக்கிறது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின் பல நாடுகள் தங்கள் மக்கள் மற்றும் தூதரக அலுவலர்களை விமானங்கள் மூலம் அங்கிருந்து மீட்டது. எனினும், காபூல் நகரில் இருக்கும் ரஷ்ய தூதர்களை மட்டும் அந்நாடு வெளியேற்றாமல் இருந்தது. ரஷ்ய அரசு, கடந்த 2003 ஆம் வருடத்தில் தலிபான்களை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது.

எனினும் அவர்களுடன் தொடர்பில் தான் இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் மாஸ்கோவில் ரஷ்யா, ஆப்கானிஸ்தான் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. இந்நிலையில், ரஷ்யா, ராணுவ போக்குவரத்து விமானங்களில் உதவி போர்டுகளை ஆப்கானிஸ்தானின் காபூல் நகருக்கு அனுப்பியிருக்கிறது.

மேலும், அந்நாட்டிலிருந்து, வெளியேற தயாராக இருந்த ரஷ்ய நாட்டு மக்கள் மட்டும் ரஷ்ய பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் ஆப்கானிஸ்தான் நாட்டு மாணவர்கள் என்று மொத்தமாக 200 பேரை விமானத்தில் அழைத்துச் சென்றிருக்கிறது.

Categories

Tech |