Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2000 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம்…. இன்னும் சற்று நேரத்தில்…. சென்னை மக்களே உடனே கிளம்புங்க….!!!!!!!

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று  2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்  நடைபெற இருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையிலும் சென்னையில் இதுவரை 32 கொரோனா  தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த முகாம்கள் மூலமாக இதுவரை 40 லட்சத்து 34 ஆயிரத்து 207 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது. மேலும் இன்று  நடைபெற இருக்கின்ற 33வது தடுப்பூசி முகாமிற்காக ஒரு வாரத்துக்கு பத்து முகாம்கள் வீதம் 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்த முகாம்களில் பணி புரிவதற்காக காவல்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தெற்கு ரயில்வே துறை சார்ந்த அலுவலர்கள் ஈடுபட இருக்கின்றனர். சென்னையில் 47 லட்சத்து 97 ஆயிரத்து 719 பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்கள் என ஆய்வின் முடிவில் தெரிய வந்திருக்கிறது. இதில் இதுவரை 4 லட்சத்து 34 ஆயிரத்து 244 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் 43 லட்சத்து 63 ஆயிரத்து 475 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி  செலுத்த வேண்டி இருக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற  சமுதாய நல மையங்களில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். அதனால் பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தி கொரோனாவை ஒழிப்போம் என அதில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |