தமிழகத்தில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தஞ்சையில் ரூபாய் 1050 க்கு விற்க்கப்பட்ட பொட்டாஸ் உரம் தற்போது 1700க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பயிர்கள் செழித்து வளர பொட்டாஷ் உரம் அவசியம் என்ற நிலையில் விலை உயர்ந்துள்ளது. பல பகுதிகளில் பொட்டாஸ் உரம் கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றசாட்டுகளை முன் வைத்துள்ளனர். இந்தநிலையில், தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்துள்ள பொட்டாஷ் உரத்திலிருந்து 20,000 மெ.டன் கூடுதலாக தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இருப்பில் உள்ள பொட்டாஷ் உர மூட்டைகள் ரூ.1,040 என்ற விலையிலேயே விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.