நெல்லையில் உள்ள பிரசித்தி பெற்ற காந்திமதி அம்பாள் கோவிலில் நடைபெற்ற லட்ச தீப திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் தீபாவளி ஜொலித்தது.
2000 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசையன்று லட்ச தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கடந்த 11ம் தேதி யாகசாலை பூஜையுடன் லட்ச தீப திருவிழா தொடங்கியது.
தொடர்ந்து 10 நாட்களாக அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றது. இந்த நிலையில் விழாவை முன்னிட்டு லட்ச தீப திருவிழா தை அமாவாசையையொட்டி நேற்று நடைபெற்றது. இதில் கோவில் வளாகத்தில் உள் மற்றும் வெளி பிரகாரங்களில் லட்சக்கணக்கில் தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டன. முதன்முறையாக பிரமிக்கத்தக்க வகையில் சூழலும் ராக்கெட் வடிவிலான கூம்பு வடிவில் தீப விளக்குகள் வடிவத்தில் ஏற்றப்பட்டனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.