தமிழகத்தில் இன்று மேலும் 2,396 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2 வாரங்களாக 1,000த்தை தாண்டிய நிலையில், இன்று 4வது நாளாக 2,000த்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 56,000ஐ தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனா பாதித்தவர்களில் 1,499 பேர் ஆண்கள் ஆவர். 897 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 35,019 (61.60%) பேர் ஆண்கள், 21,806 (38.36%) பேர் பெண்கள், 20(0.035%) பேர் திருநங்கைகள் ஆவர். தமிழகத்தில் 85 கொரோனா பரிசோதனை மையங்கள் தற்போது வரை உள்ளன.
அதில், அரசு சார்பில் 45 பரிசோதனை மையங்களும், 40 தனியார் பரிசோதனை மையங்களும் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 33,231 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதனை மையங்களில் 8,61,211 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் குணமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தவிர தற்போது 24,822 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.